முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்

Monday, January 24, 2011

இந்தியன் வங்கி லாபம் ரூ. 491 கோடி

மும்பை, ஜன.24: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி நடப்பு நிதி ஆண்டில் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ. 491 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டியதைக் காட்டிலும் 11.3 சதவீதம் கூடுதல் என்று வங்கியின் தலைவர், நிர்வாக இயக்குநர் டி.எம். பாசின் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 441.38 கோடியாகும்.
வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் 14.38 சதவீதம் அதிகரித்து ரூ. 2,640 கோடியானது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ. 2,308 கோடியாகும்.
9 மாதங்களில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,275 கோடி. முந்தைய ஆண்டு இது ரூ. 1,145 கோடியாக இருந்தது. 9 மாதத்தில் வங்கியின் வருமானம் ரூ. 7,677 கோடி. முந்தைய ஆண்டு இது ரூ. 6,713 கோடியாக இருந்தது. இந்தியன் வங்கியின் பங்குகளின் விலை திங்களன்று 5 சதவீதம் அதிகரித்து ரூ. 231.95-க்கு விற்பனையானது.
ஐசிஐசிஐ வங்கி: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 2,039 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட இப்போது 77.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தக் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,149 கோடியாகும்.
ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டின் மொத்த வருமானம் ரூ. 15,415 கோடியாகும். சென்ற நிதியாண்டில் இது ரூ. 14,176.80 கோடியாக இருந்தது. நிகர லாபம் கூடிய நற்செய்தியால், மும்பை பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கின் விலை ரூ. 18 அதிகரித்து ரூ. 1,083-க்கு விற்பனையானது.
விஜயா வங்கி: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 151.80 கோடியாகும். கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் லாபம் ரூ. 124.50 கோடியாக இருந்தது. இது 22 சதவீத வளர்ச்சியாகும்.
2010 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் விஜயா வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,584.40 கோடியாகும். கடந்த நிதியாண்டின் வருமானம் ரூ.1,447 கோடியைவிட இது 9.46 சதவீத அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் விஜயா வங்கிப் பங்கின் விலை ஒன்றரை சதவீதம் உயர்ந்தது.
யூனியன் வங்கி: வங்கியின் மூன்றாம் காலாண்டு வருமானம் ரூ. 4,693.06 கோடியாகும். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டு வருமானம் ரூ. 3,758 கோடியை விட இதில் 24.87 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
யூனியன் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ. 579.57 கோடியாகும். இதே கால அளவில் கடந்த நிதியாண்டு ஈட்டிய நிகர லாபமான ரூ. 534.13- கோடியை விட இது 8.5 சதவீதம் அதிகமாகும். 2010-11 ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் வரையான 9 மாத காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,484 கோடி.
மணப்புரம் ஜெனரல் ஃபைனான்ஸ்: நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 113 சதவீதம் உயர்ந்து ரூ. 74.53 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 34.99 கோடியாகும். 9 மாத காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 180.86 கோடி. முந்தைய ஆண்டு இது ரூ. 79 கோடியாக இருந்தது. சொத்து நிர்வாக மேலாண்மை காரணமாக லாபம் அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் செயல் தலைவர் வி.பி. நந்தகுமார் தெரிவித்துள்ளார். காலாண்டில் புதிதாக 402 கிளைகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் நிறுவன கிளைகளின் எண்ணிக்கை 1,795 ஆக உயர்ந்துள்ளது. காலாண்டில் புதிதாக 3.25 லட்சம் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10.28 லட்சமாக உயர்ந்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத் ஃபோர்ஜ்: கல்யாணி குழுமத்தின் அங்கமான பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 83 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 117 சதவீதம் கூடுதலாகும்.
நிறுவனத்தின் வருமானம் 52 சதவீதம் அதிகரித்து ரூ. 790 கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வருமானம் 80 சதவீதம் உயர்ந்து ரூ. 359 கோடியானது. ஆட்டோமொபைல் அல்லாத பிற துறைகளின் வருமானம் 121 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமரராஜா பேட்டரீஸ்: நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு விற்பனை 16 சதவீதம் அதிகரித்து ரூ. 42.49 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 36.68 கோடியாகும். 9 மாத காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 126.03 கோடியாகும். ஒரு பங்குக்கு ரூ. 2 ஈவுத் தொகை (டிவிடெண்ட்) அளிக்க நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. நிறுவனம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஈவுத் தொகை அளிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Nice info,

    follow my classified website - indian latest online classiindia classified - www.classiindia.in

    ReplyDelete

பயன்படுத்தியவர்கள்